நீங்க பார்க்காத Bigg Boss 2 Tamil Scenes - Unseen Deleted Scenes




  Kamal Haasan கட்சி அறிவித்தபிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தொடங்கியுள்ள Bigg Boss 2 Tamil  நிகழ்ச்சி தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் இதில் வெறும் 1 அல்லது ஒன்றரை மணி நேர காட்சிகள் மட்டுமே இடம்பெறும். 

   ஆனால் அங்கே உள்ள கேமராக்கள் 24 மணிநேரமும் எடுத்துக்கொண்டே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஒளிபரப்பப்படும் ஒன்றரை மணிநேரத்தை தாண்டி Hotstar-ல் தினமும் Morning Masala மற்றும் Midnight Masala என்ற பெயரில் காலை மற்றும் மாலை 1 மணிநேரம் நேரலை செய்யப்படுகிறது. இது உங்களால் வேறு எங்குமே பார்க்கமுடியாது. டிவியில் ஒளிபரப்பபடுவது ஒருசில குறிப்பிட்ட காட்சிகள் மட்டுமே. மேலும் இந்த Morning & Mignight மசாலாக்கள் நேரலையாக ஒளிபரப்படுகிறது.அதை தாண்டி இதை நீங்கள் Hotstar-ல் கூட பார்க்கமுடியாது. 


   இரவு ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி 10:30 மணிக்குமேல் தொடங்க படுகிறது. அதேபோல் காலை ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி 10 மணிக்குமேல் தொடங்குகிறது.இதில் நேரலையாக அங்கே நடக்கும் 1 மணிநேர வீடீயோவை பார்க்கமுடியும். இதில் எங்குமே Sceneகள் வெட்டப்படுவதோ சுறுக்கப்படுவதோ இல்லை. எனவே அங்கு நடப்பதை நடப்பதாகவே நம்மால் பார்க்க முடியும்.


அந்த விதத்தில் இன்று ஒளிபரப்பப்பட்ட மசாலாவில் Cleaning Team-ல் இருக்கும் ரித்விகா பாத்திரங்களை தேய்த்துக்கொண்டு இருக்கிறார். Cooking டீம் தலைவியான மும்தாஜ் அனைவருக்கும் சப்பாத்தி செய்து கொண்டு இருக்கிறார். அவருக்கு உதவியாக மஹத் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அனந்த் சாப்பிட்டுவிட்டு அமைதியாக யாரிடமும் பேசாமல் உட்கார்ந்து இருக்கிறார்.

   யாஷிகா முழுமையான மேக்அப் உடன் சென்றாயன் உடன் விளையாடிக்கொண்டு இருக்கிறார். பாலாஜியின் முன்னாள் மனைவி நித்யா முதுகு வலியால் கஷ்டப்படுவதை பார்த்த வைஷ்ணவி அவருக்கு மசாஜ் செய்கிறார். இதுபோன்ற மேலும் பல பிக் பாஸ் 2 தகவல்களுக்கு நம் ப்லாகை தொடருங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்