ஜனனி ஐஸ்வர்யா லிப் டூ லிப்! வரம்பு மீறும் பிக் பாஸ் 2?
பிக் பாஸ் 2 வில் ஏற்கனவே ஆபாசம் என்பது தலைவிரித்து ஆடும் இந்த நேரத்தில், டாஸ்க் என்ற பெயரில் லிப் டூ லிப் முத்தமிட செய்வது அதை மேலும் அதிகரிக்கவே தோன்றுகிறது.
பிக் பாஸ் என்பது வடநாடுகளில் இருந்து தான் தொடங்கப்பட்டது. ஆகையால் அதில் ஆபாசம் என்பது அளவுக்கு அதிகமாகவே இருந்து வந்தது. அதேபோல இந்தியாவில் ஹிந்தியில் நடந்தபோதும் இது வரம்புமீறவே செய்தது. ஆனால் தமிழில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது இது தமிழகம் என்பதால் அந்த அளவுக்கு இருக்காது என்றே பேசப்பட்டது.
அதற்கேற்றார்போல இதன் சீசன் ஒன்றில் ஓவியா ஆரவ் முத்தமிட்டது மக்களுக்கு காட்டப்படவில்லை. இதற்கு காரணத்தை கமலிடம் கேட்டபோது இது தமிழகம், மேலும் பிரைம் நேரத்தில் ஒளிபரப்படுவதால் குழந்தைகளும் பார்ப்பார்கள்.எனவே அம்மாதிரியான காட்சிகள் நீக்கப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் அந்த கொள்கை இந்த பிக் பாஸ் 2 வில் தூக்கி வீசப்பட்டது போல தெரிகிறது.
அனைத்துமே இரட்டை அர்த்தம்:
ஏற்கனவே இந்த சீசனில் இரட்டை அர்த்த வசனங்கள் போட்டியாளர்களால் நிறையவே பேசப்படுகிறது. இது இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் எபிசோடில் குறைவாக இருந்தாலும் காலை மற்றும் மாலை ஒளிபரப்பப்படும் நேரலையில் நிறையவே நம்மால் பார்க்க முடிகிறது. அதிலும் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா இணைந்து இதர போட்டியாளர்களிடம் பேசும் பேச்சுக்கு எல்லையே இல்லை. அனந்த் வைத்தியநாதன் கூட இவர்களின் சிக்கினார்.
லிப் டூ லிப் டாஸ்க் :
இந்நிலையில் தினசரி டாஸ்க் கொடுக்கப்பட்டு வரும் இந்நிலையில் இன்றைய டாஸ்க் மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஐஸ்வர்யா தத்தா மற்றும் ஜனனி ஐயர் இருவரும் ஒருவருக்கொருவர் லிப் டூ லிப் முத்தம் கொடுப்பது போல நம்மால் பார்க்க முடிகிறது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இது நடைபெறுகிறது.
இதற்கிடையில் இதே ப்ரோமோவில் தாடி பாலாஜி அவரின் மனைவியை கிள்ளி விளையாடுவதும் அதற்கு அவரின் மனைவி வெறுப்படைவதையும் நாமல் பார்க்க முடிகிறது. இதேபோல நேற்றைய நிகழ்ச்சியில் ஷாரிக் ஜனனி ஐயர் இடுப்பு தெரிகிறது என்று கூறிவிட்டு சூடான காபியை அவரின் இடுப்பில் வைத்து விளையாடுவதையும் நம்மால் பார்க்க முடிந்தது.
கடந்த சீசனில் குழந்தைகள் பார்ப்பதற்காக இத்தகைய காட்சிகளை நீக்கியதாக கூறிய விஜய் தொலைக்காட்சி தற்போது வரம்பு மீறுவது எதற்காக என கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையில் பலரும் பல கருத்துக்களை பகிர்ந்தாலும் இம்மாதிரியான காட்சிகள் இளைஞர்களை சந்தோசப்படுத்தவே செய்கிறது. மேலும் அவர்கள் இதுபோன்ற காட்சிகளை பார்த்த உடனே இதைவைத்து மீம்ஸ் போடுவதை ஆரம்பிக்கிறார்கள்.
இதைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிருங்கள். மேலும் இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்!


கருத்துகள்
கருத்துரையிடுக