நித்யா ஒரு சாக்கடை-அனைத்து உண்மையையும் சொல்லும் பிக் பாஸ் பாலாஜி




  பிக் பாஸ் 2 Tamil நிகழ்ச்சியில் தாடி பாலாஜி மற்றும் அவரின் முன்னாள் மனைவி நித்யா இருவரும் களமிறக்கப்பட்டபோது ஒன்று இருவரும் இணைவார்கள் அல்லது இவர்களின் சண்டை வெளிப்படும் என்ற எண்ணத்திலேயே விஜய் தொலைக்காட்சி இவர்களை அழைத்திருப்பார்கள் என்று பேசப்பட்டது. 

   இதை மும்தாஜ் உள்ளிட்ட அனைத்து போட்டியாளர்களும் எண்ணெய் ஊற்றுவதாகவே தெரிகிறது. அது இப்பொது உண்மை ஆகியுள்ளது ஆனால் இருவரும் இணையவில்லை அதைவிடுத்து இருவருக்கும் சண்டை மூண்டுள்ளது.





   தொடக்கம் முதலே பாலாஜி நல்ல மனிதர் என்று பேசப்பட்ட சூழலில் இன்று வெறும் சமையல் சார்பாக சண்டை மூண்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் Promoவில் நித்யா சமைத்து கொண்டிருக்கிறார். அப்போது சமையலில் வெங்காயம் சேர்க்க வேண்டாமா? என சாதாரணமாகவே பாலாஜி கேட்கிறார். அதற்கு வேண்டாம் தேவை இல்லை என்று அவரின் முன்னாள் மனைவி நித்யா கூறுகிறார். இதற்கிடையில் மும்தாஜ் வந்து வெங்காயம் சேர்க்க வேண்டியது தானே? என கேட்கிறார். அவரிடமும் வேண்டாம் என்ற பதிலையே அளிக்கிறார் நித்யா. அதன் பின் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் நிலையில் மும்தாஜ் கோவமாக உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை இங்கேயே காமிக்காதீர்கள், அது இதர அனைவருக்கும் கஷ்டத்தை கொடுக்கும் என்று கூறுகிறார்.





   இன்று மும்தாஜ் தாடி பாலாஜியிடம் ஏன் நித்யா உங்கள் மீது கோவமாக இருக்கிறார் என்று கேட்டதற்கு பாலாஜி அனைவருக்கும் சுதந்திரம் தேவை தான். ஆனால் நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று இருந்தால் அவளவுதான் எனக் கூறுகிறார். பின்னர் சென்றாயன் பாலாஜியிடம் உங்களுக்கிடையில் சண்டையை ஏற்படுத்த இங்கே பலரும் முயல்கிறார்கள் என கூறுகிறார். அதற்கு பாலாஜி கோவமாக சாப்பிடும்போது சாக்கடையை பற்றி ஏன் பேசுகிறாய். நான் சாக்கடை எனச் சொன்னது எல்லாரையும் சேர்த்துத்தான் எனக்கூறுகிறார். இதைப் போன்ற மேலும் பல சுவாரஸ்யமான பிக் பாஸ் தகவல்களுக்கு நம் Blog-ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்