சர்கார் படத்தின் தலைப்பை மாற்ற நினைக்கும் படக்குழு- வில்லங்க டைரக்டரால் வந்த சிக்கல்



   ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் 62 படத்திற்கு சர்கார் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே இந்த பெயரை பயன்படுத்தியுள்ள ஓர் வில்லங்க டைரக்டரால் படத்தின் தலைப்பு பிரச்னைக்கு உள்ளாகுமா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

 சர்கார் கூட்டணி:

       நடிகர் விஜய் மூன்றாவது முறையாக, ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணையும் படம் தான் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

   தளபதி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என முன்பே அறிவித்திருந்தது.

    இந்த வார்த்தைக்கு  ஹிந்தியில் ‘அரசு’ என்று அர்த்தம் பெறும். இதனால் இந்தப் படம் அரசியலை மையமாக வைத்திருக்கும் என பேசப்படுகிறது.

படத்தலைப்பில் உள்ள சிக்கல்:

   பொதுவாகவே விஜய்யின் படம் என்றால் பிரச்சனை எழுவது வழக்கமாகிவிட்டது, அந்த விதத்தில் காவலன், பைரவா, மெர்சல்,உள்ளிட்ட படங்களின் தலைப்பிற்கு பிரச்சனை எழுந்தது.

   இப்போது இந்த தலைப்பில் ஏற்கனவே ஹிந்தியில் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா 3 படங்களை இயக்கியுள்ளார். இதனால், படத்தின் தலைப்பில் பிரச்சனை எழுமா என ரசிகர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.


   எது எப்படியாயினும் மூன்றாம் முறையாக இணையும் இந்த கூட்டணி நிச்சயம் வெற்றிப் பாய்ச்சல் பாயும் என்றே ரசிகர்கள் நம்புகின்றனர்.மேலும் பிரச்சனைகள் புதிதல்ல என்பதால் இது ஒரு தொடக்கமே எனவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். அமிதாப் பச்சன் நடித்த படம் அது என்பதால் இதை முன்பே யோசிக்காமலா முடிவு செய்து இருப்பார்கள்? இதுதான் வெற்றிக்கான டைட்டில் எனவும் நம்மால் ட்விட்டரில் கருத்துக்களை பார்க்க முடிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்