Bigg Boss 2-ல் தாடி பாலாஜியை சண்டை போட்டு அசிங்கப்படுத்திய நித்யா
தொடக்கம் முதலே பாலாஜி நல்ல மனிதர் என்று பேசப்பட்ட சூழலில் இன்று வெறும் சமையல் சார்பாக சண்டை மூண்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் Promoவில் நித்யா சமைத்து கொண்டிருக்கிறார். அப்போது சமையலில் வெங்காயம் சேர்க்க வேண்டாமா? என சாதாரணமாகவே பாலாஜி கேட்கிறார். அதற்கு வேண்டாம் தேவை இல்லை என்று அவரின் முன்னாள் மனைவி நித்யா கூறுகிறார். இதற்கிடையில் மும்தாஜ் வந்து வெங்காயம் சேர்க்க வேண்டியது தானே? என கேட்கிறார். அவரிடமும் வேண்டாம் என்ற பதிலையே அளிக்கிறார் நித்யா. அதன் பின் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் நிலையில் மும்தாஜ் கோவமாக உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை இங்கேயே காமிக்காதீர்கள், அது இதர அனைவருக்கும் கஷ்டத்தை கொடுக்கும் என்று கூறுகிறார்.
இதற்கிடையில் டேனி ஜனனி ஐயருடன் கேமரா முன் அமர்ந்து இந்த சண்டையில் எங்களுக்கு உணவு கிடைக்காது போல தெரிகிறது, எனவே பிக் பாஸ் எங்களுக்கு ஹோட்டலில் உணவை வாங்கி கொடுங்கள், நான் வெளியே வந்து அதற்கான பணத்தை தந்து விடுகிறேன் என்று பேசிக்கொண்டிருக்கிறார். இந்த பாலாஜி நித்யா சண்டை மேலும் நீடிக்குமா அல்லது இருவரில் ஒருவர் சீக்கிரம் வெளியேறி விடுவாரா என்பதை பொறுத்துஇருந்து பார்க்காலம். இதைப் போன்ற மேலும் பல சுவாரஸ்யமான பிக் பாஸ் தகவல்களுக்கு நம் Blog-ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்!





கருத்துகள்
கருத்துரையிடுக