ட்ரைலருக்கு பதில் முழு படத்தை தவறுதலாக யூடியூபில் அப்லோட் செய்த சோனி பிக்சர்ஸ்- படக்குழு கடுங்கோபம்
சோனி பிக்சர்ஸ் தனது யூடியூப் சேனலில் ஒரு படத்தின் ட்ரைலரை அப்லோட் செய்வதற்கு பதில் தவறுதலாகவோ வேண்டுமென்றோ ஒரு முழு படத்தை அப்லோட் செய்துள்ளது. இதுகுறித்து அந்த படக்குழு கடும் கோபத்தில் உள்ளார்.
ஜான் மாத்தியூஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் தான் :காளி, தி கில்லர்". இப்படத்தின் 2 நிமிட ட்ரைலருக்கு காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் 90 நிமிட முழுப்படத்தையும் அப்லோட் செய்தது சோனி பிக்சர்ஸ். இப்படம் அப்லோட் ஆகிய உடனேயே 11000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இப்படத்தை சோனி டெலிட் செய்ய கிட்டத்தட்ட 8 மணிநேரம் ஆகியது. இதுவே பெரிய அதிர்ச்சி மற்றும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படம் HD தரத்தில் பகிரப்படவில்லை என்பது ஒரு ஆறுதல். படம் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டாலும் அதை பதிவிறக்கம் செய்த சிலர் அவர்களது சேனலில் அதை பகிர்ந்து வருகிறார்கள்.
முழுமையான தகவல்கள்

கருத்துகள்
கருத்துரையிடுக